19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை : விஜேதாச
11/10/2018
அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை .
11/13/2018

C3D58FD8-2693-4A2E-9020-FD0DE94A1DC0

நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல  என தெரிவித்துள்ள  நாடாளுமன்ற  உறுப்பினர் எனினும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள தினேஸ் குணவர்த்தன நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் எனினும் இதுவொரு இறுதிதீர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் தேர்தலிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது அதனை இரத்துச்செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள நிமால் சிறிபால டிசில்வா மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மாத்திரமே பிரதமரை வெளியேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளை சபாநாயகர் பிரதமரை நியமித்தால் அது செல்லுபடியாகாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது இலங்கையில் அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல நாங்கள் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  சபாநாயகரிற்கு  நாளை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரமில்லை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவராமல் நாளை பாராளுமன்றத்தை கூட்டுவது சர்வதேச அரங்கில் இலங்கையை அவமானப்படுத்தும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *