Deprecated: Function create_function() is deprecated in /home/radiovaa/public_html/wp-content/plugins/revslider/includes/framework/functions-wordpress.class.php on line 257

Deprecated: The each() function is deprecated. This message will be suppressed on further calls in /home/radiovaa/public_html/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-mapper.php on line 111
ரணிலும் – கருவுமே பொறுப்புக் கூற வேண்டும் -தினேஷ் – Radio Vaanam
Radio Vaanam intro animation
11/05/2018
19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை : விஜேதாச
11/10/2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவுமே பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசியலமைப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அமைத்த புதிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க உறுப்பினர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டனர்.

அவற்றை தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் மக்கள் இந்த புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை மேற்குலக நாடுகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நிரூபிப்பதற்காகவுமே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் அமைச்சர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.AE6DDB6F-87D6-43FF-8A73-B7C8D49329B2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *